அமெரிக்காவில் பிறந்த இங்கிலாத்தின் யுத்த பத்திரிகையாளர் மேரி கொல்வினின் வாழ்க்கை 'எ பிரைவேட் வோர்' (A Private War) என்ற தலைப்பில் ஹொலிவூட்டில் திரைப்படமாகிறது.
குறித்த திரைப்படம் நவம்பர் 2 ஆம் திகதி மெரிக்காவின் லொஸ் ஏன்ஜெல்ஸ் மற்றும் நியூயோர்க் நகர்களிலும் நவம்பர் 16 ஆம் திகதி உலகம் முழுதும் திரையிடப்படவுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள A Private War திரைப்படத்தின் உத்தியோகபூர்வ ரெயிலரின் முற்பகுதியில் மேரி கொல்வின் விடுதலைப் புலிகள் சீருடை அணிந்தவர்களுடன் காடு ஒன்றினூடாக நடந்து செல்வது காட்டப்பட்டுள்ளது.
'யுத்தம் எனக்கு அவசியமில்லை. ஆனால் நான் யுத்தத்தை தேடி போகிறேன்' (I hate being in a war zone, but I also feel compelled) எனத் தெரிவித்தவர் பத்திரிகையாளர் மேரி கொல்வின்.
இயக்குநர் மேத்யு ஹெயின் மேன் இயக்கம் இப்படத்தில் பிரபல ஹொலிவுட் நடிகை ரோஸ்மண்ட்பைக் மேரி கொல்வினாக நடிக்கிறார். எழுத்தாளர் ஷோபா சக்தி இப்படத்தில் தமிழ்செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எங்கெல்லாம் யுத்தம் நடைபெற்று அப்பாவி மக்கள் பாதிப்படைகின்றார்களோ அங்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து அந்நாட்டு மக்களின் மனசாட்சியாக பதிவு செய்த ஊடகவியலாளர் மேரி கொல்வின். அமெரிக்காவில் பிறந்த மேரி கொல்வின் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற சண்டே டைம்ஸ் பத்திரிகையின் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றியவர். இதனால் பல ஆண்டுகளாக லண்டனில் வசித்து வந்தார்.
2001ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது வன்னிப் பகுதிகளுக்கு செல்ல செய்தியாளர்களுக்கு இலங்கை இராணுவம் தடை விதித்திருந்தது. எனினும் ஒருவாறு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளுக்குள் சென்று செய்தி சேகரித்தார் மேரி கொல்வின்.
பின்னர் அங்கிருந்து வெளியேறிய போது தாக்குதலில் ஒரு கண்ணில் பார்வையை முற்றிலுமாக இழந்தார் மேரி கொல்வின்.
இத்தாக்குதல் சம்பவத்தைப் பற்றி மேரி கொல்வின் எழுதிய போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த துன்பத்தைவிட நான் பட்ட துன்பம் ஒன்றும் இல்லை. என்றாலும் தனது அனுபவம் தமிழ் மக்களின் வேதனையை கூற போதுமானது என்று இலங்கை உள்நாட்டு போரை உலகின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
பின்னர் கொசோவோ, செசென்யா மற்றும் அரபு நாடுகளிலும் தொடர்ந்து பணியாற்றிய மேரி கொல்வின் கடந்த 22 -02 - 2012 ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற உள்நாட்டு போர் குறித்த செய்தி சேகரிக்க சென்ற போது வெடிகுண்டு வெடிப்பின் போது உயிரிழந்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.