பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட இப்போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை (19) மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் மாவட்டச் செயலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் மண்முனை வடக்கு, ஆரையம்பதி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து 30 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எஸ். விஜயதீபன் தலைமையில் 50 கிலோ முதல் 90 கிலோ வரையான 8 பிரிவுகளில் முதலில் குழுக்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளிலிருந்து முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றினர். இரண்டாம் இடத்திற்கு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த எஸ். சியாம்குமார்; இலக்கம் - 11 (65 -70 கிலோ) இரண்டாம் இடத்திற்கும் மற்றும் கோரளைப் பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த எம்.ஜீ.எம். அஸ்மிர் இலக்கம் - 1 (55 – 60 கிலோ) மூன்றாம் இடத்திற்கும் தெரிவாகினர்.
இலங்கை பழு தூக்கல் பயிற்றுவிப்பாளர் ஜி.சி.என். கமஹே, ஆணழகன் கட்டடைப்பு பவுண்டேசனைச் சேர்ந்த பி.ஐ. குமார மற்றும் ஈ.யு.எஸ்.எச். ஜயசிங்க ஆகியோர் நடுவர்களாகக் கலந்து கொண்டு வெற்றியாளர்களைத் தெரிவு செய்தனர்.
முதலாம் இடத்தைப் பெற்றவருக்கான வெற்றிக் கிண்ணத்தை பதில் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ப. ஜெயக்குமார், இரண்டாம் இடத்தைப் பெற்றவருக்ககான வெற்றிக் கிண்ணத்தை கிராம சேவையாளர் எஸ். ஜெககோசரன், மூன்றாம் இடத்தைப் பெற்றவருக்கான வெற்றிக் கிண்ணத்தை ஜி.சி.என். கமஹேயும் வழங்கி வைத்தனர். (tamil.news.lk)