ஸ்காட்லாந்தில் இடம்பெற்ற WUKF கராத்தே போட்டியில் அகிலன் 2 சில்வர் மெடல்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 18/06/2018 (திங்கட்கிழமை)
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட லண்டனில் வசித்துவரும் செல்வன் கருணாகரன் அகிலன் ஸ்காட்லாந்து (Scotland) நாட்டில் நடைபெற்ற 7 ஆவது உலக WUKF கராத்தே போட்டியில் (7 th WUKF World Karate Championships) இல் 11 வயது பிரிவில் பங்குபற்றி Kata மற்றும் Rotational kumite களில் 2 வெள்ளி பதக்கங்களை தனதாக்கிக் கொண்டுள்ளார்.
இப்போட்டியில் 41 நாடுகளைச் சேர்ந்த 2100 போட்டியாளர்கள் பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செல்வன் அகிலன் முன்னரும் ஐயர்லாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உலக கராத்தேப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை தொடர்பான எமது முன்னைய செய்திகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
குறித்த போட்டியில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீமாகக் கொண்ட மேலும் சில சிறுவர் சிறுமியர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.