Valvettithurai.org
Facebook Youtube Twitter
Home
About Valvettithurai
In Valvettithurai
News (தமிழில்)
News (in English)
Obituaries
Photos
Videos
VVT Information
Articles (தமிழில்)
Articles (in English)
Marine matters
Useful Links
About us
Contact us
 
ஆதவன் பக்கம்
Athavan's Page
 
அழைப்பிதழ்கள்
 
திருமண அழைப்பிதழ்கள்
 
பிறந்தநாள் வாழ்த்துகள்
 
அறிவித்தல்கள்
 
தமிழகத் திருக் கோயில்கள்
Tamil Nadu Temples
 
Useful Links
World time finder
 
Photos
 
Videos
 
Tourist Places of Valvettiturai
 
Jaffna - Prominent Places
யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்கள்
 
Vanni - Prominent Places
வன்னியின் முக்கிய இடங்கள்
 
East - Prominent Places
கிழக்கின் முக்கிய இடங்கள்
 
Up Country - Prominent Places
மலைநாட்டின் முக்கிய இடங்கள்
 
Tourist places of Southern Sri Lanka
 
Colombo & Suburbs - Tourist Places
கொழும்பின் சுற்றிலா மையங்கள்
 
Tourist Places of the World

அதிபர் செல்வநாயகம் அவர்கள் - அ.ஆதவன்

பிரசுரிக்கபட்ட திகதி: 20/02/2019 (புதன்கிழமை)

எண்பதுகளின் நடுப்பகுதிகளில் சிதம்பராவில் இலவச புகைப்படப் பயிற்சிப் பட்டறை ஒன்று நடாத்தப்பட்டது.  அதில் நானும் ஒரு மாணவனாகக் கலந்து கொண்டேன். நடாத்தியவர் அமரர் செல்வ நாயகம்  அவர்கள். என்னைப் போன்றோருக்கு பிலிம் சுருளையே வாங்க யோசிக்க வேண்டிய காலம் அப்போது. தானே காமராவைக் கொண்டு வந்து பட்டறையையும் நடாத்தியிருந்தார். 

ஹாட்லியில் படித்ததால், இதைவிட அதிபருடன் நெருங்கிப் பழக சந்தர்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் சக வகுப்பு நண்பர்கள் பலர் அதிபர் பற்றி அடிக்கடி கதைப்பதை பார்த்துள்ளேன். வீதி வழியாக அதிபர் அவ்ராகள் சென்று வருவதை தினந்தோறும் பார்த்துள்ளேன். 
 
ஹாட்லி கல்லூரியின் அப்போதைய அதிபர் சாமுவேல், துணை அதிபர் வல்லிபுரம் ஆகியோரை ஒத்து இருந்தவர – கடமை, கண்ணியம், கட்டுபாடு – போன்ற கோட்பாடுகளுக்கு உரித்தானவர் அமரர் செல்வநாயகம்  என்றால் மிகையாகாது. 
 
எமது பகுதியின் ‘சாரணரின் தந்தை’ என்றால் அது செல்வநாயகம் அவர்கள் தான். 
 
சாரணீயம் தவிர்ந்து அதிபர் அவர்கள், தொழில் நுட்பக் கல்வியில் அதிகம் நாட்டம் காட்டியிருந்தார். அதிபர் அவர்களின் போதனையில், வானொலிகளை தாமே உருவாக்கி இயக்கிய சக நண்பர்களைப் பார்த்து வியந்து இருக்கின்றேன். 
 
80 களின் நடுப் பகுதிகளில் சிதம்பரக் கல்லூரியில் மாபெரும் கண்காட்சி ஒன்று அதிபர் தலமையில் நடாத்தப்பட்டிருந்தது. வெட்டப்பட்ட தவளை, கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த குறையில் பிறந்த சிசு, மாணவர் உருவாக்கிய வானொலிப் பெட்டி என நீளும் பல விடயங்கள் அக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டமை இன்றும் நினைவில் உள்ளது. அதுவரை புத்தகக் கல்வியில் இருந்த எனது பக்கத்தை மற்றொரு பக்கத்துக்கு கொண்டு சென்ற கண்காட்சி அது. 
 
ஒரு சிலர் அதிபரைப் பற்றி விமர்சனங்கள் கூறியதையும் கேட்டுள்ளேன்.
 
முதலாவதானது தொழில் நுட்ப பாடங்களில் அதிகம் மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், பல்கலைகழக தேர்வில் மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் நாட்டம் காட்டுவது குறைவு என்பது. இன்று அதிபர் அன்று காட்டிய அதே தொழில் நுட்ப யுகத்தில் வயது வரம்பின்றி, நாம் அனைவரும் உழன்று கொண்டிருக்கின்றோம். 
 
மற்றையது அதிபர் அவர்களின் காலத்தில் சிதம்பரக் கல்லூரியில் மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட பின்னடைவு. 
 
இதற்கு பிரதான காரணம் - அப்போதைய உள்நாட்டு யுத்தம். அதிபர் அவர்கள் சிதம்பராவில் பணியாற்றிக் கொண்டிருந்தது உள்நாட்டுப் போரின். மிகச் சிக்கலான காலம் – இராணுவ முகாமுக்கு அருகில் கல்லூரி.   
 
நான் விரும்பியது, 
 
எமது பிரதேசத்தில் வாழ்கின்ற மூத்த குடிமக்களில், அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே அவர் தம் சேவைகளையும் பெருமைகளையும் எழுத்து மூலம் நான் தெரியப்படுத்த விரும்பியவர்களில் முதலாமானவர் அமரர் செல்வநாயகம் அவர்கள் தான். 
 
கடந்த வருடம் நான் விடுமுறையில் நின்ற பொழுது, இதற்காக  அமரர் செல்வநாயகம் அவர்களின் சகோதரரை சென்று  சந்தித்து, அதிபர் பற்றிய விபரங்களை தொகுத்துத் தருமாறு கேட்டுக் கொண்டேன்.
 
ஆனாலும் நான் விரும்பியவாறு அதிபர் அவர்கள் வாழ்கின்ற காலத்திலேயே, அதிபர் பற்றி பதிவிட முடியாமல் போனது சற்று வருத்தம் தான். (அதிபர் பற்றிய குறித்த தொகுப்பு இன்னும் ஓரிரு தினங்களில் பிரசுரமாகும்)
 
அதிபர் அவர்களின் ஒரு மகன் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 87 ஆம் ஆண்டில் ஊரிக்காட்டில் இடம்பெற்ற ஒரு சண்டையில் சாவடைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விடயம். 
 
ஆனாலும் பலருக்கும் தெரியாத விடயம் ஒன்று,
 
சண்டை இடம்பெற்ற சில நாட்களின் பின்னர், சூசை அவர்கள் எனது தந்தையாருடன் உரையாடிக் கொண்டிருந்த பொழுது ஒரு விடயத்தைக் குறிப்பிட்டதாக எமது தந்தையார் கூறியிருந்தார்.  
 
‘செல்வநாயகம் மாஸ்ரரின் மகன் ஒரு வெற்று இடத்தை விட்டுச் சென்றுள்ளார்’ என்று சூசை அவ்ராகள் தெரிவித்திருந்தாராம். சுமார் 1 அடி நீள அகலத்தில் தாங்கள் பாவித்துக் கொண்டிருந்த ‘நீண்ட தூர  தொலைத் தொடர்பு சாதனத்தை’  செல்வநாயகம் மாஸ்ரின் மகன் ஒரு கைப் பிடி அளவு சாதனமாக மாற்றி அமைத்திருந்தாராம் - அசாத்திய திறமை
 
(இச் சாதனம் அநேகமாக ‘MF/HF’ தொலைத் தொடர்பு சாதனமாக இருக்கும் என்று பின்னாளில் – கப்பல் ஏறிய பின்னர் - நான் ஊகித்துக்கொண்டேன், ஆனாலும் உறுதிபடக் கூற முடியவில்லை).
 
நீண்ட நாள் அதிபர், சாரணத்தில் நிபுணத்துவம், தொழில் நுட்ப பாடங்களில் அசாதாரான  அறிவு, இயக்கத்தில் இருந்து மறைந்த மகன்.............................. ஊரிலும், இணையங்களிலும், விக்கிபீடியாவிலும் ஒரு சுற்று சுற்றி வந்திருக்கலாம்.
 
‘முற்றாக நிரம்பிய ட்ரம், சத்தமிடாது’ என்பார்கள். சிறந்த ஒரு. வரைவிலக்கணமாக வாழ்ந்து மறைந்து விட்டார் செல்வநாயகம் அவர்கள். 
 
அதிரூபசிங்கம் ஆதவன் 
 
பிற்குறிப்பு,
 
செல்வநாயகம் அவர்கள் செல்வ[வி]நாயகம் என்றே பொதுவாக அழைக்கப்பட்டு வந்தார். அவ்வாறே நானும் மேலே குறிப்பிட்டுள்ளேன்.
 

 

Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.

உங்கள் கருத்தை தமிழில் அல்லது ஆங்கிலத்தில் இங்கு எழுதுங்கள்
(Comment here in Tamil or English)
Name:   Email:   Country:
Enter the same number in the box below
Verification Code: 
RAJKUMAR PERIYATHAMBY (canada) Posted Date: February 22, 2019 at 20:35 
சிறப்பு அவர் ஒரு சிறந்த அதிபர் மிகசிறந்த ஆசிரியர் அவர் அதிபராக இருந்தகாலத்தில் நானும் அங்கே படித்திருக்கின்றேன் என்பதில் பெருமைகொள்கின்றேன் .


எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.


பிந்திய 25 செய்திகள்:
கடலுக்குள் நடத்தப்பட்ட கையிறிழுத்தல் போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 17/05/2024 (வெள்ளிக்கிழமை)
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முதல்தடவையாக வீர வணக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
ஆழமான கருத்தைக்கூறும் கார்ட்டூன்
பிரசுரிக்கபட்ட திகதி: 16/05/2024 (வியாழக்கிழமை)
முள்ளிவாய்க்கால் நினைவுகளைச் சுமந்து
பிரசுரிக்கபட்ட திகதி: 15/05/2024 (புதன்கிழமை)
மயிலியதனை இந்து மயானத்தில் சிரமதானம்
பிரசுரிக்கபட்ட திகதி: 13/05/2024 (திங்கட்கிழமை)
முள்ளிவாய்க்கால் 15 வது ஆண்டு நினைவேந்தல் வாரம் ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
VEDA மாசி மாத கணக்கறிக்கை
பிரசுரிக்கபட்ட திகதி: 12/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)
மரண அறிவித்தல் - பத்மாவதி சுப்ரமணியம்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
இலவச மரக்கன்றுகள் வழங்கல்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
தெய்வேந்திரா ஐயர் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி மஹோற்சவ விஞ்ஞாபனம் - 2024
பிரசுரிக்கபட்ட திகதி: 11/05/2024 (சனிக்கிழமை)
பேராசிரியர் சிவத்தம்பியின் 92 ஆவது பிறந்த தினம் இன்றாகும்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
மரண அறிவித்தல் - மேர்ஷி நிரோசினி சுரேஸ்
பிரசுரிக்கபட்ட திகதி: 10/05/2024 (வெள்ளிக்கிழமை)
தங்கனின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
புவியியலாளருக்கு உதவும் உராங்குட்டான்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/05/2024 (வியாழக்கிழமை)
கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/05/2024 (புதன்கிழமை)
Green layer இன் மரம் வளர்ப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
குறுத்திரைப்படம் - சம்மட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
தனக்கு சுயமருத்துவம் செய்த குரங்கு
பிரசுரிக்கபட்ட திகதி: 07/05/2024 (செவ்வாய்க்கிழமை)
உடுப்பிட்டி மதுபானசாலை விவகாரம் - நீதிமன்றத்தை நாடிய சமூக அமைப்புக்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதியாவின் தாயார் காலமானார்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
விளம்பரம் - வீடு விற்பனைக்கு (வல்வெட்டித்துறை)
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சின்ன கடற்கரையோரம் சுத்திகரிப்பு
பிரசுரிக்கபட்ட திகதி: 06/05/2024 (திங்கட்கிழமை)
சோதிசிவம் நினைவாக துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற சிலம்பாட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 05/05/2024 (ஞாயிற்றுக்கிழமை)

கருத்துக் கணிப்பு - Poll
வாரம் ஒரு படம்
Weekly Photo
 வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
வடமராட்சியின் இலக்கியவாதிகள் Notable Literary of Vadamaradchi Jaffna
மேலும்... 
மரண அறிவித்தல்கள்
மேலும்... 
Obituaries
நாள்காட்டி
<<<May - 2024>>>
SunMonTueWedThuFriSat
   1234
5
6
7
8
9
10
11
1213
14
15161718
19
20
21
22
23
2425
26
2728293031 
மேலும்... 
 சூரிய உதயம்
 சூரிய அஸ்தமனம்
 சந்திர உதயம்
 சந்திர அஸ்தமனம்
ஆசிரியர் தலையங்கம்
தூபியடி - (எமது தலையங்கம்)
மேலும்... 
தமிழ் பெயர்கள்
அம்பரன் - ஆகாயத்தான்
அம்பிகாபதி - சிவன்
அப்சன் - சந்திரன்
அதிகிருதன் - நீதிமான்
மேலும்...
மாதம் ஒரு காணொளி
Sangupiddy Bridge
சங்குப்பிட்டி மேம்பாலம்
மேலும்... 
அந்தியேட்டி
அழைப்பிதழ்கள்
நினைவஞ்சலிகள்
வல்வை பற்றி
வாரம் ஒரு பழங்கதை - விளம்பரங்கள் கூறும் பழங்கதை - வல்வையூா் அப்பாண்ணா
மேலும்... 
Planned
வல்வையின் பிரபல்யங்கள்
திரு.பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்
மேலும்... 
வல்வெட்டித்துறை அன்னபூரணி கப்பல்
Sailing Vessel "Florence C Robinson" of Valvettithurai
VVT Schools
VVT Temples
வல்வையின் வரலாறு
History of Valvettithurai
வயித்தியலிங்கப்பிள்ளை புலவர், வல்வெட்டித்துறை
First remarkable identity of Valvettithurai
வல்வை அம்மன் கோவில் இந்திரவிழா
Valvettithurai's famous festival
வல்வையின் கடலியல்
Shipping of Valvettithurai
வல்வெட்டித்துறை ஆழிக்குமரன் ஆனந்தன்
Guinness World Records holder V.S Kumar Anandan of Valvettithurai
வல்வையில் கலை இலக்கியம்
Art, Literature etc In Valvettithurai
வல்வையும் அரசியலும்
Political side of Valvettithurai
வல்வையில் இந்துத்துவம்
Hindutva in Valvettithurai