டென்மார்க்கைச் சேர்ந்த உலகின் முதலாவது பெரிய தனியார் கப்பல் நிறுவனமான A P Moller Maersk கப்பல் நிறுவனம் கடந்த 9 வருடத்தில் பெற்ற இலாபத்தை இந்த ஆண்டில் ஒரேயடியாக பெறவுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கொரொனாத் தொற்றால் உலகெங்கும் பல பொருட்களுக்கு ஏற்பட்ட தேவை உட்பட்ட சில அசாதாரண விடயங்கள் இந்தளவு இலாபத்துக்கு காரணம் எனக் கூறப்படும் வேளையில் Danish corporate வரலாற்றில் முதன் முறை எனக் கூறப்படுகின்றது.
இதே வேளை 20 அடி கொள்கலங்கள் 4250 ஐக் காவவல்ல Panamax container ship என்னும் கொள்கலன் கப்பல்களின் ஒரு நாள் வாடகையும் அண்மைய நாட்களில் 10 மடங்கு அதிகரித்து நாள் ஒன்றுக்கு 200,000 அமெரிக்க டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.