அனுமதி மறுக்கும் ஆசிய துறைமுகங்கள், கப்டனின் இறந்த உடலுடன் 2 மாதம் அலையும் கப்பல்
பிரசுரிக்கபட்ட திகதி: 09/06/2021 (புதன்கிழமை)
Evergreen கப்பல் நிறுவனத்தால் இயக்கப்படும் "Ital Libera" என்னும் கொள்கலன் கப்பல், கடந்த இரண்டு மாதங்களாக ஆசிய துறைமுகங்கள் அனுமதி மறுத்ததால், அக்கப்பலின் கப்டனின் இறந்த உடலுடன் தற்பொழுது தனது பாதையை மாற்றி பயணித்துக் கொண்டிருக்கிறது.
Covid19 வைரஸ் பீடிக்கப்படட Captain Angelo Capurro, வயது 61, கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி இறந்துள்ளார்.
இக்கப்பல் ஆபிரிக்க நாடுகளுக்கும் - கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே வழமையாக வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.
தென் ஆபிரிக்காவின் Durban துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கப்பல், ஆசியத் துறைமுகங்களால் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் "Force majeure" (தவிர்க்க முடியாத வலுக்கட்டாய சூழ்நிலை காரணமாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் நிறைவேற்றப்படமுடியாது போதல்). அறிவிக்கப்பட்டு, கப்பலானது தற்பொழுது பாதை மாற்றப்பட்டு, குறித்த கப்டனின் சொந்த நாடான இத்தாலி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது..
அனுமதி மறுக்கும் ஆசிய துறைமுகங்கள், கப்டனின் இறந்த உடலுடன் 2 மாதம் அலையும் கப்பல்
Asian ports deny entry to Covid hit Ship Ital libera, Ship returns with body of deceased Captain#COVID19#ItalLibera#Captainhttps://t.co/1DVtkWBNvo
— Valvettithurai.Org (@Valvettiturai) June 9, 2021
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.