படங்களில் காணப்படுவது யாழ் அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையின் புதிய தோற்றம் ஆகும். யாழில் இப்படி ஒன்றா என சற்றே புருவத்தை உயர்த்திப் பார்க்க வைக்கும் இந்த பேட்டை கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.
யாழில் 90 களின் முற்பகுதியில் ஏற்கனவே இயங்கி வந்திருந்த இந்த கைத்தொழில் பேட்டை கடந்த காலங்களில் சேதமடைந்த அடைந்ததை அடுத்தே மஹிந்த சிந்தனை தேசிய நிகழ்ச்சிக்கு அமைவாக இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதியுதவியுடன் இது மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு யாழ் அச்சுவேலியில் பலத்த எதிர்பார்ப்புடன் 65 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மானிக்கப்பட்டிருந்த கைத் தொழில் பேட்டையானது திறம்பட இயங்கத் தொடக்கி 1991 ற்கு பின்னர் யுத்தத்தினால் முற்றாகச் சேதமைடைந்திருந்தது. நாட்டில் உள்ள 18 கைத்தொழில் பேட்டைகளில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையும் ஒன்றாகும்.
சுருங்கக் கூறின் எவரும் இங்கு முதலீடு செய்ய முடியும். இப்பேட்டையில் ஒரு சிறிய நிலப்பகுதியை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வாங்கினால் நீர், மின்சாரம் போன்ற உற்பத்திக்குத் தேவையான பல விடயங்கள் செய்து கொடுக்கப்படும்.
இக்கைத் தொழில் பேட்டையானது முழுமையாகச் செயற்படும் பட்சத்தில் 2000 மில்லியன் ரூபா அளவிலான முதலீட்டை பெறக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளதுடன் சுமார் 3500 ற்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற வழி சமைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.