கனடா வாழ் வல்வை மக்களின் ஒன்றுகூடல் நேற்று முன்தினம் நடைபெற்றது
பிரசுரிக்கபட்ட திகதி: 03/08/2015 (திங்கட்கிழமை)
கனடா வாழ் வல்வை மக்களின் 2 5 ஆவது கோடை கால ஒன்று கூடல் (Toronto summer get together) நேற்று முன்தினம் 1 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் சிறுவர் பெரியவர் ஆண் பெண் பாலர் என அனைத்துப் பிரிவினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு நலன் விரும்பிகளின் அனுசரணையுடனான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப் பட்டன.
மேலும் நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் தாயகத்தின் விரும்பி உண்ணும் உணவு வகைகளான கொத்து ரொட்டி மற்றும் கூழ் என்பனவும் இதர உணவுகளுடன் பரிமாறப் பட்டிருந்தன.
ஒன்றுகூடல் 4169 Bathurst Street இல் அமைந்துள்ள Earl Bales Park இல் இடம்பெற்றது.
மேலதிக படங்களை பின்வரும் எமது Facebook இணைப்பில் பார்வையிடலாம்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.