வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்காக SL-Remit அறிமுகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 08/10/2021 (வெள்ளிக்கிழமை)
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி புதியதொரு SL-Remit என்னும் கைத்தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பணம் அனுப்புதலை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலங்கை மத்திய வங்கி புதிய பணம் அனுப்பும் முறைகள் மற்றும் குறைந்த செலவில் பணம் அனுப்பும் முறைகள் பற்றிய பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமித்துள்ளது.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, எச்எஸ்எஃப்சி வங்கி, கார்கில்ஸ் வங்கி, டயலொக் , மொபிடெல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்குழுவில் அடங்குகின்றனர்.
சம்பந்தப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இப்புதிய கைத்தொலைபேசி செயலி ‘SL-Remit’ எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்செயலியில் சுயமாகப் பதிவு செய்வதன் மூலம் பணப்பரிமாற்ற இயக்குனர்கள் மற்றும் உலகளாவிய நிதி தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுடன் இணைந்து எந்த நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் வசதிகள் மற்றும் இலங்கையின் எந்த வங்கிக் கணக்கிற்கும் உடனடியாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதியைப் பெறலாம்.
இந்தச் செயலியில் அந்நியச்செலவாணி விகிதங்கள், குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், பில் கட்டணங்களைச் செலுத்தல் போன்ற பல சேவைகளும் இணைக்கப் பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி, நிதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, இலங்கை வங்கி அதிகாரிகள் சங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், லங்கா கிளியர் போன்ற பங்குதாரர்களின் உதவியுடன் இந்தச் செயலி செயற்படுத்தப்படுவதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
பெரியதம்பி ராஜ்குமார் (Canada)
Posted Date: October 10, 2021 at 22:27
சிறப்பு சிறப்பு .
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.