Children's Well wishers Network கணிதப்போட்டி 2015® - வருடாந்த மீள் கருத்து அமர்வுகள்
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2015 (புதன்கிழமை)
Children's Well-wishers Network (CWN) ஆல் 2012 இலுருந்து முன் எடுக்கப்பட்டு தொடர்ந்து நாடாத்தப்படும் கணிதப் போட்டிக்கான வருடாந்த மீள் கருத்து அமர்வுகள் வரும் சனிக்கிழமை 5th September 2015 இலுருந்து பல்வேறு இடங்களில் நடாத்தப்பட இருக்கின்றன.
இந் நகர்வுகளின் போது மாணவருக்கு அவர்கள் தாம் செய்த கணிதப் பரீட்சையின் விடைகளை பார்த்து தாம் எவ்வாறு இன்னும் சிறப்பாக செய்திருக்க கூடும் என்பதை புரிந்து கொள்வார்கள்.
பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு அலகிலுமுள்ள உண்மையான தராதரங்களை அறிவதோடு, எவ்வாறு இன்னும் சிறப்பாக எப்படி கற்கணும் எங்கே இலவசஉதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அறிய இது ஒரு இலவச வாய்ப்பு .
அத்துடன் எல்லா மாணவரும் தகமை சான்றிதல்களை பெற்று கொள்வர். மேலும் கூடிய சித்தி பெற்றோர் அவர்களுக்கான பரிசில்களை அடைவர்.
எமது நோக்கம் எல்லோரும் நன்றாக கற்கணும் என்பதே. அத்துடன் எம் குழந்தைகளை நல்லொழுக்கம் நிறைந்த வருங்கால மனிதாபிமான சிற்பிகளாக செதுக்கப்பட விரும்புகின்றோம் ஆதலினால் நாங்கள் அடிப்படை கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கின்றோம். குறைவாக புள்ளிகள் எடுத்த மாணவரினை எவ்வாறு முன்னேற்றுவது என்று நிறைய சிந்திக்கின்றோம். நேரத்தை செலவிடுகின்றோம்.
போட்டிகள், பொறாமை வக்கிரம் சுயநலம் பாகுபாடுகளை வளர்க்க ஊன்றுகோலாக மாறக் கூடாது. . கூடிய விரைவில் எமது இப் போட்டிகளின் வினைப்பயன் எம் மண்ணில் விதைக்கப் படும் .
எம்முடன் தோள் கொடுத்து உண்மையாக உழைக்கும் வல்வை நண்பர் உட்பட்ட எல்லா மாண்புறு மனிதருக்கும் எமது நன்றியுடன்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.