விக்னேஸ்வர பாலர் தின விழாவும், பட்டத் திருவிழாவின் அறிமுக விழாவும்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/11/2018 (வெள்ளிக்கிழமை)
வல்வெட்டித்துறை விக்னேஸ்வர பாலர் பாடசாலையில் பாலர் தின விழாவும், பட்டத் திருவிழாவின் அறிமுக விழாவும் வரும் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09.00 மணிக்கு சிவகுரு வித்தியாசாலை தையல் பாகர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
விக்னேஸ்வர பாலர் பாடசாலையின் தலைவர் திரு.வி.கவிசெல்வன் அவா்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்விற்கு திரு.சந்திரசேகரம் பிரசாந் (செயலாளர், நகராட்சி மன்றம், வல்வெட்டித்துறை) அவர்கள் பிரதம விருந்தினராகவும், திரு.செல்லக்கண்டு நவரத்தினம்(யப்பந்துரை) அவர்களும், குமாரசாமி பாலசிங்கம்(சிவலிங்கம்) அவர்களும், மோகனந்தசாமி செல்வச்சிவம் அவர்களும் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
மேலும் நிகழ்வுகளின் வரிசையில் விக்னேஸ்வர பாலர் பாடசாலைப் பாலர்களின் கலைநிகழ்வுகளும், பட்டப் போட்டித் திருவிழாவின் அறிமுக விழாவும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பட்டம் கட்டும் வல்லுனர்கள், பட்டத் திருவிழாவை ரசிக்கும் ரசிகர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.