இன்று காலை வெடிப்புக்கு உள்ளான கப்பலில் 'X-press-pearl' தற்பொழுது தீ முழுமையாக பரவியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்துக்கு வருவதற்காக கொழும்பிலிருந்து சுமார் 9.5 கடல் மைல்கள் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் கடந்த 20 ஆம் திகதி தீ ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து தற்பொழுது தீ கட்டுப்பாட்டை இழந்து கப்பல் முழுதும் பரவியுள்ளது.
தொடர்ந்து பற்றி எரியும் தீ காரணமாக கொள்கலன்கள் சில வெடித்து கடலில் வீழ்துள்ளதாயும், அவற்றில் ஒரு சில கடலில் தாண்டுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொள்கலன்களின் சமநிலை குழப்பம் காரணமாக கப்பல் தனது வலப்பக்கமாக சாய்ந்துவருவதாகவும், கப்பலில் தீயை அணைக்க ஐரோப்பாவிலிருந்து தீயை கட்டுப்படுத்தும் பிரத்தியேக உப்கரணங்கள் கொண்டு வரப்படுவதாக X-Press peral கப்பல் உரிமையாளர் தெரிவித்துள்ளனர்..
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்டுள்ள X-Press peral கடந்த 3 மாதம் முன்பே சேவையில் ஈடுபடுத்தப்பட்ட புதிய கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.