தொண்டைமானாறு மைதான திறப்புவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் ஓட்டம்
பிரசுரிக்கபட்ட திகதி: 28/05/2016 (சனிக்கிழமை)
தொண்டைமனாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் (Thondaimanaru United Sports club) புதிய மைதான திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. தொண்டமனாற்றுச் சந்தியிலிருந்த காலை 8 மணியளவில் ஆரம்பமான சைக்கிள் ஓட்டம் வல்லை - உடுப்பிட்டி - வல்வெட்டித்துறைச் சந்தி வழியாக தொண்டைமனாற்று ஒற்றுமை விளையாட்டுக் கழக புதிய மைதானத்தைச் சென்றடைந்தது. .
வீதிப் போட்டிகளைத் தொடர்ந்து மைதானம் இன்று காலை திறக்கப்படவுள்ளது.
புதிய மைதானம் தொண்டைமனாற்றுச் சந்தியிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் தொண்டைமனாறு - வல்லை வீதியின் வலப் பக்கத்திலேயே அமைந்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.