வங்காளவிரிகுடாவில் இலங்கைக்கு வடமேல் திசையில் உருவான பானி புயல் இன்றைய தினம் பிற்பகல் 2.30 அளவில் திருகோணமலையில் இருந்து வடமேல் திசையில் 640 கிலோ மீற்றருக்கு அப்பால் நகரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ' FANI' (உச்சரிப்பு 'போனி') வட அகலாங்கு 11.1N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.5 E இற்கும் அருகில் திருகோணமலைக்கு அருகாமையில் நிலை கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்த கட்டமைப்பு மேலும் விருத்தியடைந்து வடக்கு திசைக்கு அழுத்தத்தை கொடுத்த வகையில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கரையோரத்தை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷேடமாக மத்திய மலை பிரதேசத்திலும், வடக்கு, வட மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். ஊவா, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றர்க்கு மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். ஏனைய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி இடம்பெற கூடும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.