தென்மேற்கு வங்காள விரிகுடாவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு அல்லது மேற்கு பகுதியை நோக்கி நகர கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது .
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதேவேளை அரபி கடலின் மத்திய கிழக்கு பகுதியில் 'கியார்' (Kyarr) என்று பெயரிடப்பட்ட புயல் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் இன்று மேலும் வலுவடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலைமயம் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.