உயிர்வரை இனித்தாய் திரைப்படம் ராஜா திரையரங்கில் காண்பிக்கப்பட்டது
பிரசுரிக்கபட்ட திகதி: 13/03/2017 (திங்கட்கிழமை)
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் ராஜா திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தின் தாயிரிப்பாளர் திரு.கே.எஸ்.துரை வெளியிட்டுள்ள விபரம் வருமாறு,
உயிர்வரை இனித்தாய் ராஜா திரையரங்கை ஏற்பாடு செய்த அன்பு உள்ளங்கள்..
கனடா முதல் டென்மார்க் வரை மகத்தான ஆதரவு..
உயிர்வரை இனித்தாய் திரைப்படம் யாழ். ராஜா திரையரங்கில் வெற்றிகரமாக காண்பிக்கப்பட பல வர்த்தக வள்ளல்கள் துணை புரிந்துள்ளனர்.
ரியூப் தமிழ் நிறுவனத்தில் மகத்தான ஆதரவே இந்தப் பணியை சிறப்பாக முன்னெடுக்க துணை புரிந்த முதல் காரணியாகும்.
தாயகத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட ரியூப்தமிழ் இளைஞர்கள் இந்தப் பணியை சிறப்பாக முன்னெடுத்துள்ளார்கள்.
அதேவேளை திரையரங்கில் ஒவ்வொரு காட்சியாக ஒன்பது காட்சிகளையும் பல நாடுகளையும் சேர்ந்த வர்த்தக பெருமக்களும், திரைப்பட ஆர்வலர்களும் வழங்கியுள்ளனர்.
திரைப்படத்தின் முதல் இரண்டு காட்சிகள் : இங்கிலாந்தில் உள்ள அப்பலோ பனானாலீப்வ் உணவகம் வழங்கியிருக்கிறது. இதன் அதிபர் திரு. த. பாலேந்திரராஜா இத்திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கு டென்மார்க் வந்து வாக்களித்தபடி பெரும் உதவியை வழங்கியிருக்கிறார். இவர் திரைப்பட இயக்குநரின் பாடசாலை தோழன் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது காட்சியை தற்போது கனடாவில் வாழும் பிரபல முன்னாள் வல்வை முன்னணி விளையாட்டு வீரரும், திரைப்பட விநியோகஸ்தருமான எஸ். ஜெயபாலசிங்கம் வழங்கியுள்ளார்.
நான்காவது காட்சியை கனடா ரொரன்ரோ வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் தனது செலவில் ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்தாவது காட்சி தமிழ் பெண் விமானி அர்ச்சனாவின் உதவியில் காண்பிக்கப்படுகிறது, இவர் இதற்காகவே விமானத்தில் இருந்தபடி இப்படத்தில் தான் பாடிய பாடலை பாடி முகநூலில் சிறப்பு கொடுத்துள்ளார்.
ஆறாவது காட்சி டென்மார்க் உயிர்வரை இனித்தாய் கலைஞர்களான சுகேந்திரா, ராஜா குணசீலன் இருவராலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏழாவது காட்சி டென்மார்க் பாடல் அரசு பாத்தி, கவிஞர் மு. இராஜலிங்கம், அன்ரன் தோமாஸ் ஜெசிந்தா குடும்பத்தினரால் காண்பிக்கப்படுகிறது.
எட்டாவது காட்சி வல்வை புனிதவதியம்மா, நிர்மலாதேவி சுகதேவனால் காண்பிக்கப்படுகிறது.
ஒன்பதாவது காட்சி பத்மா சுப்பிரமணியம், சுந்தரவதி சுப்பிரமணியம், இரத்தினகோபால் புஸ்ப்பராணி தம்பதியர், ஜெயாஞ்சலி, திருமதி ஷியால்டா ரவிசங்கர் ஆகியோரின் உதவியால் காண்பிக்கப்படுகிறது.
இவர்கள் வழங்கிய உதவி காரணமாக ஒன்பது காட்சிகளையும் கட்டணமின்றி காண்பிக்க வழி பிறந்துள்ளது.
சனி, ஞாயிறு இரு தினங்களும் ஏறத்தாழ அரங்கு நிறையும் கட்டம் வந்துவிட்டது, இதனால் மேலும் சில தினங்கள் திரைப்படம் நீடிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மூவாயிரம் போஸ்டல்கள் யாழ் குடாநாட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன, வவுனியாவரை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தாயகத்தில் உள்ளோர் முயற்சிகளை டென்மார்க் உட்பட பல நாடுகளில் வாழும் உயிர்வரை இனித்தாய் கலைஞர்கள் ஐரோப்பாவில் இருந்தபடியே வாழ்த்தியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.