மீனவர்களின் பாதுகாப்பிற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 17/06/2016 (வெள்ளிக்கிழமை)
மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்புக்காக விசேட தொலைபேசி இலக்கம் இரண்டை கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சு (Department of Fisheries & Aquatic Resources - DFAR) அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பில் இந்த தொலைபேசி இலக்கம் மூலம் தெரியப்படுத்த முடியும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
0112546154, 0722244065 ஆகியவையே அந்த தொலைபேசி இலக்கங்கள் ஆகும். இத்திட்டத்தை செயற்படுத்தும் நோக்கில் நவீன உயிர்காப்பு உபகரணங்களோடு வைத்தியர் உள்ளிட்ட உழியர்களைக் கொண்ட குழுவுடனான உயிர்காப்பு படகொன்றும் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கான அனுசரணையை இலங்கை உயிர்காப்பு நிறுவனம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.