தொண்டைமானாறு இந்து அபிவிருத்தி நிலையத்தின் கீழ் இயங்கும், அறநெறிப் பாடசாலை ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் விருத்திக்கு மாதாந்தம் திரும்பச் செலுத்தும் வட்டியில்லாக் கடனாக 3 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது.
1. தெரிவுசெய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு கோழிகளுடன் கூடும் வழங்கப்பட்டன.
2. 'இளம் சுயமுயற்சியாளரை ஊக்குவிக்கும் திட்டத்தில்" தெரிவுசெய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 50 கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.முன்னர் கோழிகளுடன் கூடும் வழங்கப்பட்டது.
3. தெரிவுசெய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு அவர்களது அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முகமாக பண உதவி வழங்கப்பட்டுள்ளது.
4. தெரிவுசெய்யப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 10 கோழிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
குறித்த உதவிகள் திரு. தி. இந்திரராஜாவின் குடும்ப "தனிநபர் வியாபார அபிவிருத்தி நிதி' யிலிருந்து வழங்கப்பட்டுள்ளது
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.