தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தில் மூத்தோர் மதிப்பளிப்பு நிகழ்வு 06.10.2019 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 0900 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு முதன்மை விருந்தினராக திரு ஆழ்வாப்பிள்ளை ஸ்ரீ (பிரதேச செயலர், பருத்தித்துறை) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு.செ.ஸ்ரீனிவாசன் (இளைப்பாறிய மேலதிக அரச அதிபர்) அவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சார்ய சுவாமிகள் அவர்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து பேரவை சார்ந்தோர் தலைமை உரை நடைபெறவுள்ளதுடன் கலை நிகழ்வுகளுடன் கூடிய மூத்தோர் மதிப்பளிப்பு ஆகியன நடைபெறவுள்ளன. .
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.