இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (11) ஆம் திகதி மாலை வல்வைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த இந்த விஜயத்தின் போது திரு.மங்கள சமரவீர வல்வெட்டிதுறையின் தீருவில் மற்றும் ரேவடிப் பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.
தீருவில் பகுதியில் அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம், மற்றும் ரேவடிப் பகுதியில் அமைந்துள்ள சுங்க இலாகாவிற்குரிய காணியில் ஒரு பொது வேலைத் திட்டம் தொடர்பாக அமைச்சர் ஆராய்ந்துள்ளதாகத் தெரிய வருகின்றது.
திரு.மங்கள சமரவீர கின்னஸ் புகழ் நீச்சல் வீரர் ஆழிக்குமரன் ஆனந்தனின் மனைவி திருமதி மோனலின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.