பிரத்தியேக வகுப்புகள் நடாத்தும் ஆசிரியர்க்கு இலவச இணையவசதி
பிரசுரிக்கபட்ட திகதி: 01/03/2021 (திங்கட்கிழமை)
தொழில்நுட்ப அமைச்சு பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தும் ஆசிரியர்களுக்கு இலவசமான இணையவழி வசதிகளை வழங்கவுள்ளது.
தொழில்நுட்ப அமைச்சு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப முகவர் நிலையம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு ஆகியவற்றுடன் கூட்டிணைந்து பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தும் ஆசிரியர்களுக்கான இணையவழி வகுப்புக்களுக்கான வசதிகளை வழங்குவதற்காக மைக்ரோ சொ ப்ற் குழுக்களுக்கான அனுமதிப் பத்திரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் அனுமதிப் பஇலவசமாக பத்திரத்தை இலவசமாக பெற்றுக் கொள்ள பிரத்தியேக வகுப்புக்களை நடத்தும் ஆசிரியர் தம்மை mytutor.edu.lk என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறும், மேலதிக விபரங்களை 0774679664 மற்றும் 0779369665ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.