சகல பிள்ளைகளும் தரம் ஐந்து புலமைப்பரில் பரீட்சையில் தோற்றுவதை கட்டாயமாக்கும் சுற்றுநிரூபம் நீக்கப்படவுள்ளது
இதற்குரிய ஆலோசனைகளை கல்வி அமைச்சின் செயலாளருக்கு தாம் வழங்கியிருப்பதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீளமைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவின் சிபாரிசுகளை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எட்டியதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
குழுவின் அங்கத்தவர்கள் இன்று கல்வி அமைச்சில் கூடினார்கள். இதன்போது புலமைப்பரிசில் பரீட்சையின் ஆரம்பகால நோக்கங்கள், அந்தப் பரீட்சை சமகாலத்தில் பிள்ளைகளுக்கு அழுத்தம் தரும் பரீட்சையாக மாறியுள்ள விதம் போன்றவை பற்றிய ஆராயப்பட்டதாகவும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்தார்.
மேற்கண்டவாறு அரச செய்தி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.