சுவீடனில் நடைபெறவுள்ள 'The King of the Ring' குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்வதற்கு பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் செல்வன் வி.சனுஜன் தெரிவாகியுள்ளார்.
சுற்றுப் போட்டி எதிர்வரும் 22 - 24 ஆம் திகதி வரை சுவீடனின் போரஸ் (Borås) நகரில் இடம்பெறவுள்ளது.
மாணவனின் பயணத்துக்கான செலவினை அமெரிக்கா மற்றும் கனடாவில் அமைந்துள்ள ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் வழங்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பயிற்றுவிப்பாளருடன் சனுஜன்
22.01.2015 அன்று MAS இன் அனுசரணையில் குத்துச்சண்டை பயிற்சியை அப்போதைய MAS - விடியல் பொதுமுகாமையாளர் திரு.ரவி விஜேநாதன் மற்றும் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளர் வள்ளுவன் மாஸ்ரர் ஆகியோருடன் ஹாட்லியின் பழைய மாணவர் ஒருவர் ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.