தொண்டைமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 19 ஆம்திகதி புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 16 தினங்கள் இடம்பெறவுள்ளது.
நாடில் தற்பொழுது நிலவும் கொரொனா தொற்று அச்ச நிலை காரணமாக மகோற்சவ காலத்தில் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக சுகாதார பிரிவினரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவுறுத்தல்களாக ஆலய உற்சவ காலத்தில் 150 அடியார்கள் உரிய நேரத்தில் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். அடியார்கள் ஆலயத்திற்கு வருகை தரும் போது தேசிய அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணம் இவற்றில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக உடன் கொண்டுவரவேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று வீதித்தடையில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்பட்டே உட் செல்ல அனுமதிக்கப்படுவர். வீதித்தடைகள் ஊடாக ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்கள் எப்பொழுதும் முகக் கவசம் அணிந்திருத்தல் கட்டாயாமானதாகும்.
ஆலயத்திற்குள் உள்நுழைவதற்கு முன்னர் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆலயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தனியாள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வழிபாடுகளை மேற்கொள்ளுதல் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். அடியார்கள் ஆசார சீலர்களாக ஆலயத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அடியார்கள் ஆலயத்தில் நீண்ட நேரம் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கொரொனா தொற்று பாதிப்பு காரணமாக சுய தனிமைப்படுத்தல் அல்லது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஏற்கனவே உட்படுத்தப்பட்டு காலம் முடிவுற்ற பின்னர் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தரும் பட்சத்தில் தனிமைப்படுத்தல் முடிவுற்ற காலத்தில் வழ்ங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்களை தம்முடன் கொண்டு வருதல் வேண்டும். முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ சான்றிதழ்களை எப்பொழுதும் தம் வசம் வைத்திருக்க வேண்டும். வயோதிபர்கள், நோயாளிகள், சிறு குழந்தைகள் தங்களது தனியார் சுகாதார நலன் கருதி ஆலயத்திற்கு வருகை தருவதை இயன்றவரை தவிர்த்தல் நன்று. கொவிட்-19 அறிகுறிகளான காய்ச்சால், தடிமன், தும்மல், இருமல் போன்றவை காணப்படுபவர்கள் ஆலயத்திற்கு வருகை தருவதை தவிர்ப்பது நன்று.
ஆலய சுற்றாடல் வீதிகளில் மண்டகப்படி வைத்தால், பிரசாதம் வழ்ங்குதல், தாக சாந்தி , அன்னதானம் வழ்ங்கல் போன்றவை முற்றாக தடை செய்யப்ப்ட்டுள்ளன. அங்கப்பிரத்ட்சனம் செய்தல், அடி அழித்தல், கற்பூரசட்டி எடுத்தல், காவடி தூக்குக் காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்திலும், அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளுதல் முற்றாக தடைசெய்யப்ப்ட்டுள்ளது. ஆலய சுற்றாடல் மற்றும் பொதுமக்கள் கூடுவத்ற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசையரங்குகள், காலை நிகழ்வுகள் மற்றும் பொழுது போக்குக்கான அனைத்து நிகழ்வுகளும் முற்றாக தடை செய்யப்ப்ட்டுள்ளன. ஏற்கனவே ஆலய சூழலில் இயங்கிவந்த கடைகள் மாத்திரம் தொடர்ந்து இயங்கி வருவதற்கு அனுமதிக்கப்படும், எனினும் இயங்கிவரும் வியாபார நிலையங்களை விரிவாக்க அனுமதி இல்லை. ஆலய சூழலில் உள்ள வெற்றுக் காணிகளிலோ அல்லது கட்டடங்களிலோ புதிய கடைகள் அமைப்பதற்கு அனுமதி வழ்ங்கப்பட மாட்டாது என்பதுடன் நடமாடும் வியாபாரமும் அனுமதிக்கப்படமாட்டாது. ஆலய பெருந்திருவிழாவின் பொது ஆலய சுற்றாடாலில் சுகாதார நடைமுறைகளை முறையாக பின்பற்ற தவறும் பட்சத்தில் அல்லது மீறுபவர்கள் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திக்கொண்டு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழ்ங்குமாறு வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.