வடக்கில் கடும் மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்
பிரசுரிக்கபட்ட திகதி: 24/10/2019 (வியாழக்கிழமை)
நாட்டில் இன்று காலை 6.30 மணி தொடக்கம் நாளை காலை 6.30 மணி வரையில் இடம்பெறக்கூடிய கடும் மழை தொடர்பான விசேட அறிக்கையொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வடக்கு மாகாணத்திலும், கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழையுன் கூடிய காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கக்கூடும். விசேடமாக மேற்கு, வடமேற்கு, வடக்கு ஆகிய மாகாணங்களிலும் கேகாலை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை பெய்யக்கூடும்.
மேற்கு, வடமேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சியை சில இடங்களில் எதிர்பார்க்கமுடியும் என்றும் வளிமண்டலவில் திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை நாட்டில் இன்றைய தினத்தில் விசேடமாக மேற்கு, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான காலநிலை ஓரளவிற்கு அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை 5.30 மணிக்கு வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேற்கு, வடமேல், வடக்கு, தெற்கு, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு வல்வெட்டித்துறை உட்படட வடமராட்சியின் பல பகுதிகளில் மழை பெய்திருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.