வல்வை அம்மன் கோயில் வரலாறு – பாகம் 4 – பா.மீனாட்சி சுந்தரம்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/04/2015 (சனிக்கிழமை)
தேர் முட்டி
ஏற்கனவே உட்பகுதி பிரகாரத்தில் போடப்பட்டிருந்த ஒரு பகுதி கொட்டகை போக எஞ்சியிருந்த பகுதியில் 1952 ஆம் வருடம் செ.வி.நடராஜா அவர்களினால் மேற்குப்பகுதியில் 5 தூண் இடைவெளி முழுவதும், வ.ம.இராமசாமி அவர்களினால் தேவசபையின் வாயிற்பகுதி முழுவதும் போட்டுமுடிக்கப்பட்டது.
அம்மன் வாகனம்
1943 ஆம் வருடம் வல்வை பொது மக்களின் பங்களிப்புடன் மணிக்கோபுரமும் பெரிய மணியும் அமைக்கப்பட்டது. இந்த மணியில் வெடிப்பு ஏற்பட்டதனால், புதிதாக மணி ஒன்று வாங்கப்பட்டு 1959 இல் மணிக்கோபுரத்தில் பொருத்தப்பட்டது. வாகனசாலையும் இதே ஆண்டில் கட்டப்பட்டது.
தேர் முட்டியும் சேத மடைந்திருந்தமையால் சி.விஷ்ணுசுந்தரம் அவர்களினால் கட்டிக்கொடுக்கப்பட்டது. வெகுகாலமாக பாவனையில் இருந்த சிறிய மணியை பொருத்துவதற்கு ஏதுவாக கோபுரத்தின் தென்பகுதியில் இன்னொரு மணிக்கோபுரமும் அமைக்கப்பட்டது.
கோபுரம்
1957 ஆம் வருடம் பழைய கோபுரத்தை இடித்து புதியதாக ஒன்றைக் கட்டுவதற்காக, இக்
கோயிலில் 12 ஆம் திருவிழாவை நடாத்துபவர்கள் முன்வந்தமையால் ஆரம்பவேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பழைய கோபுரமானது அழகு அம்சம்கொண்ட கட்டடக்கலையோடு இந்த கோயிலில் அமைக்கப்பட்டது போன்று இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது கோபுரம் என்று சொல்லப்படுகின்றது.
வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கற்கள், வெள்ளைக்கற்கள் என்பன புதிய கோபுரம் அமைப்பதற்காக பாவிக்கப்பட்டு கோபுர வேலைகள் நிறைவுற்றன.
அம்மன், பிள்ளையார், முருகன் தேர்
மேற்குறிப்பிட்ட வேலைகள் யாவும் சிறந்த முறையில் பொது மக்களின் பங்களிப்போடு செய்துமுடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 26.01.1967 இல் பூச நட்ச்சத்திரத்தில் அம்பாளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சம்புரோட்சண கும்பா பிஷேகம் வேதாரணியம் சிவ ஸ்ரீ தியாகராஜக்குருக்கள் அவர்களினால் நடாத்திவைக்கப்பட்டது.
வ.இ.வயித்திலிங்கம் அவர்களினால் காத்தலிங்கம் ஆலயம் வெள்ளைக்கல் திருப்பணி வேலைகள் இதே காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு கட்டிமுடிக்கப்பட்டது.
முத்து மாரி அம்பாளுக்கு சித்திரதேர் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற வல்வை மக்களின் ஆவல் 1977 ஆம் வருடம் கைகூடியது. 14.09.1977 இல் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1979 ஆம் வருடம் பூர்த்தியாக்கப்பட்டது.
பூங்காவன மண்டபம்
தேர் திருப்பணி வேலைகள் கா.சண்முகம் ஸ்தபதியினது தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி வேலைகள் முடிவுற்று 09.05.1979 இல் புதிய தேர் வெள்ளோட்ட விழா சிறப்பாக நடந்தேறியதுடன் இதன் நினைவாக சிறப்புமலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
பிள்ளையார், முருகன் ஆகியோருக்கான சிறப்பு மலர்களைச் செய்து கொள்வதற்கு பொதுமக்கள் முன்வந்தமையால், அம்பாளுடைய தேரை விட சிறியதாக 2 தேர்கள் 1980 இல் அமைக்கப்பட்டன. அம்பாளுடைய தேர் ரூபா 1,94,000/- அளவிலும், பிள்ளையார் முருகன் ஆகியோரது 2 தேர்களும் ரூபா 1,10,000 /- அளவிலும் செலவுசெய்து அமைக்கப்பட்டன.
பூங்காவன மண்டபமும் வல்வை பொது மக்களால் கட்டிமுடிக்கப்பட்டது. 1978 ஆம் வருடம் சி.வேலும்மயிலும் ஐயர் அவர்களினால் மின் இணைப்பினை ஏற்படுத்துவதற்கான சிறிய அறை ஒன்று வசந்தமண்டபத்திற்கு அருகில் அமைத்துக்கொடுக்கப்பட்டது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.