வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இணைந்து இந்த வருடமும் வினோத (வி)சித்திர பட்டப்போட்டித் திருவிழா 2020 எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று பிற்பகல் 0200 மணிக்கு உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறவுள்ளது.
தலைவர் திரு.மோ.சிவமயம் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு,இ இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினாராக திருமதி சுஜீவா சிவதாஸ் (ஆணையாளர்,மோட்டார் போக்குவரத்து திணைக்களம் வடமாகாணம்) அவர்களும், திரு.M.K சிவாஜிலிங்கம் (முன்னாள் பாராளுமன்றம், வடமாகாண சபை உறுப்பினர்) அவர்களும், திரு கோ.கருணாந்தராசா (தவிசாளர்,வல்வெட்டித்துறை நகரசபை)அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் கல்விச் சாதனையாளர்கள்( 2019 ) கௌரவிற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
இது சம்ப்ந்தமாக வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையம் மற்றும் வல்வை உதயசூரியன் விளையாட்டுக் கழகம் இணைந்து வெளியிட்டுள்ள அழைப்பிதழ் கீழே இணைக்கப்ப்ட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.