யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF 2016) அடுத்த வருடம் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை யாழ் மாநகரசபை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
வடக்கில் இடம்பெறும் நுகர்வோரின் பெரிய கண்காட்சியாகக் கருதப்படும் இந்த நிகழ்வில், தேவைகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய பல உள்ளூர் மற்றும் வெளியூர் விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இந்தக் கண்காட்சியில் construction industry, hospitality industry, food, beverage and packing industry, automobile, ICT, financial services, apparel, agricultural and consumer goods ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
'Gateway to the North' என வர்ணிக்கப்படும் இந்தக் கண்காட்சியில் இந்தியாவிலிருந்தும் சில வர்த்தகர்கள் குழு பங்குகொள்ளும் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது
கடந்த வருடம் இடம்பெற்ற யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (Jaffna International Trade Fair - JITF 2015) இல் 60000 ற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.