வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த திரு.இ.ஞானசுந்தரம் (கட்டி அண்ணா) அவர்கள் வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவை கடந்த 28.10.2016 அன்று நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா - 2016 இல் ஆன்மீகத்திற்கான கலைப்பரிதி விருதினை பெற்றமைக்காக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் இன்று திருவாதிரை நன்னாளில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் மற்றும் ஏனைய ஆலயங்களிலும் புராணப் படிப்பு மற்றும் சமய சொற்பொழிவுகளையும் கடந்த 60 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .
திரு.இ.ஞானசுந்தரம் அவர்கள் கடந்த 20.11.2011 அன்று நடைபெற்ற கணபதி படிப்பகத்தின் 44 ஆவது ஆண்டுவிழாவிலும் அவரது ஆன்மீகப்பணிக்காக கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.