வருடா வருடம் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவரும் அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா எதிர்வரும் விகாரி வருடம் 2019 நூற்றாண்டு விழாவாக கொண்டாப்படவுள்ளது. நூற்றாண்டு விழாவின் முதலாவது போட்டியாக பட்டம் விடும் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டிகள் அரியாலை திறந்த வெளி மைதானத்தில் 15.07.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00 மணி தொடக்கம் மாலை 06.00 மணி வரை நடைபெறவுள்ளது.
வடமாகாண ரீதியாக
முதலாம் இடத்திற்கு 50 000/=
இரண்டாம் இடத்திற்கு 30 000/=
மூன்றாம் இடத்திற்கு 20 000/= பணப் பரிசில்களுடன் பெறுமதியான 10ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
உள்ளூர் ரீதியாக
முதலாம் இடத்திற்கு 10 000/=
இரண்டாம் இடத்திற்கு 7 000/=
மூன்றாம் இடத்திற்கு 5 000/= பணப் பரிசில்களுடன் பெறுமதியான 10ஆறுதல் பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.