குரும்பைகட்டி உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 21 வயதுக்குட்பட்டோருக்கான 08 ஓவர்கள் 9 நபர்கள் கொண்ட மென்பந்தாட்ட கிரிக்கெட் தொடரின் 2 ஆம் சுற்று ஆட்டம் இன்று இடம்பெற்றது.
தொடரில் வல்வை மற்றும் நெடியகாடு அணிகள் மோதிக் கொண்டன.
முதலில் ஆடிய வல்வை அணி 8 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டங்களை பெற்றது.அதிகபட்சமாக வல்வை அணி சார்பாக பிரசாந் 33 ஓட்டங்களை பெற்றார்.
வெற்றியிலக்கை நோக்கி ஆடிய நெடியகாடு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களை பெற்றது. வல்வை அணி சார்பாக பந்துவீச்சில் அசத்தலாக பந்துவீசிய மேனகாந் 2 ஓவர்களில் 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.