வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட, கனடாவில் வசிக்கும் கண்ணன், அமுதா தம்பதியினர் தமது திருமண நாளினை முன்னிட்டு வல்வையில் உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்புச் செய்துள்ளனர்.
இந்நிகழ்வு ஊரிக்காட்டில் அமைந்துள்ள வல்வை முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 30 குடும்பங்களுக்கு அரிசி,சீனி, பருப்பு, பிஸ்கட், தேயிலை போன்ற உலர் உணவுப் பொதி ஒன்று வழங்கப்பட்டது.
கண்ணன், அமுதா தம்பதியினரால் இது போன்ற உதவிகள் முன்னரும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.