சுப்பர் 8 லீக் சுற்றிற்குவானது மன்னார் சென் லூசியஸ்!
பிரசுரிக்கபட்ட திகதி: 02/09/2015 (புதன்கிழமை)
தினச்செய்தியின் அனுசரணையுடன் நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் வடமாகாணா ரீதியான உதைபந்தாட்ட போட்டியில் நேற்று 01.09.2015 அன்று நடைபெற்ற போட்டியானது சுப்பர் 8 லீக் சுற்றிற்கு தகுதி பெறும் போட்டியாக மன்னார் சென் லூசியஸ் வி.க எதிர்த்து அல்வாய் நக்கீரன் வி.க மோதியது.
போட்டியின் தொடக்கம் விறுவிறுப்பாக அமைந்தாலும் 14 ஆவது நிமிடத்தில் சென் லூசியஸ் அணி வீரர் பிங்கோ முதலாவது கோலினை அடித்ததை தொடர்ந்து ஆட்டம் சென் லூசியஸ் பக்கம் சாய்ந்தது. தொடர்ந்து 18 ஆவது நிமிடத்தில் ஒஸ்மன் ஒருகோலினை பெற 19 ஆவது நிமிடத்தில் உதயன் ஒருகோலினை பெற 3:0 என்றகோல் கணக்கில் முதற் பாதிஆட்டம் நிறைவுபெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 18 ஆவது நிமிடத்தில் பிங்கோ தலையால் முட்டிமேலும் ஒருகோலினைஅடிக்க 24 ஆவது நிமிடத்தில் ஸ்பெல்டன் மேலும் ஒருகோலினை அடித்து அணியின் கோல் எண்ணிக்கையினை உயர்த்தினார். போட்டியின் ஆட்ட நாயகனாக பிங்கோ தெரிவு செய்யப்பட்டு திரு.நிற்குணாநந்தன் அவர்கள் பதக்கம் அணிவிக்க அணிக்காண பரிசினை திரு.அ.நிர்மலன் வழங்கினார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.