தினச்செய்தியின் அனுசரணையுடன் நெற்கொழுகழுகுகள் வி.க நடாத்தும் வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட போட்டியில் நேற்று 31.08.2015 அன்று முதல் போட்டியாக டயமன்ஸ் வி.க எதிர் பொம்மேர்ஸ் வி.க மோதின.
பலத்த ரசிகர்களின் ஆதரவுடன் இடம்பெற்றபோட்டியில் இரு அணிகளும் தமது வியூகங்களை மாற்றி அமைத்து விளையாடியபோதும் எந்த அணியாலும் ஒரு கோல் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையினால் போட்டி சமநிலை தவிர்ப்பு உதைக்கு தள்ளப்பட்டது.
சமநிலை தவிர்ப்பு உதையில் டயமன் அணி சார்பாக இரண்டாவது உதையினை அடித்த லக்கிசனின் உதையில் பந்துகோல் கம்பத்தில்பட்டு வெளியே சென்றதால் சுதாரித்துக் கொண்ட பொம்மேர்ஸ் வி.க வாய்ப்பினை துல்லியமாக பயன்படுத்த ஐந்தாவது உதையினை அடித்த பிரேம்குமாரினது (பீமா) உதையினை சரியாக கணித்து கோல்காப்பாளர் வைகுந்தன் தடுக்க வெற்றி உறுதி செய்யப்பட்டு 4:3 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்று 3ஆம் சுற்றுக்குள் நுழைந்தது.
போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய உதயராஜ் ஆட்டநாயகனாக தொரிவு செய்யப்பட்டு முன்னாள் கழக உறுப்பினர் திரு.ப.மனோராஜ் அவர்கள் பதக்கம் அணிவிக்க அணிக்காண பரிசினை மூத்தகழக ஆலோசகர் திரு.து.துரைராஜா அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
பொம்மேர்ஸ் மூன்றாம் சுற்றில் மன்னார் சென் ஜோசப் அணியினை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
சுப்பர் 8லீக் சுற்றில் இல் கால் பதித்ததுவிண்மீன்!
இரண்டாவது போட்டியானது சுப்பர் 8 லீக் சுற்றிற்கு தகுதிபெறும் போட்டியாக பலாலி விண்மீன் வி.க எதிர்த்து கொற்றாவத்தை றேஞ்சஸ் வி.க மோதியது. போட்டியின் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக அமைய 8 ஆவதுநிமிடத்தில் றேஞ்சஸ் அணியின் வியூகத்தினை உடைத்து உதயதாஸ் கோல் ஒன்றினை அடித்து கணக்கினை ஆரம்பித்தார்.
ஆட்டத்தின் இரண்டாவது பாதிமேலும் விறுவிறுப்படைய இரண்டாவது பாதியின் 08,14, 17, ஆவது நிமிடங்களில் கன்மொரிசியஸ் (அருண்) தொடர்ச்சியாக 03 கோல்களை அடித்து அதிரவைத்தார். மேலும் ஆட்டத்தின் 21 ஆவதுநிமிடத்தில் உதயதாஸ் கோலினை அடிக்க ஆட்டத்தில் விண்மீன் 5;:0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இறுதியில் றேஞ்சஸ் அணியின் மாதுஜன் ஒருகோலினை அடிக்க ஆட்டம் 5:1 எனமுடிவுக்கு வந்தது.
மூன்று கோல்களை அடித்த கன்மொரிசியஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டு பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கின் செயலாளர் திரு.அருளானந்தசோதி அவர்கள் பதக்கத்தினை அணிவிக்க அணிக்கான பரிசினை பருத்தித்துறை உதைபந்தாட்டலீக்கின் பொருளாளர் திரு.தவனேந்திரராஜா வழங்கிகௌரவித்தார்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.