இலங்கை போக்குவரத்துச் சபையின் கிளிநொச்சி சாலையும், அம்பலாங்கொட சாலையும் இணைந்து காங்கேசன்துறை- மகரகம வைத்திய சாலை ஊடாக காலிக்கு புதிய போக்குவரத்து சேவை ஒன்றினை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த புதிய பேருந்து திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.
மகரகம வைத்தியசாலைக்கு செல்வோரின் தேவை கருதியே பிரதானமாக குறித்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
இரவு 7.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து ஆரம்பமாகும் குறித்த சேவை இரவு 8.05மணிக்கு யாழ் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்து பின்னர் 20.15மணிக்கு புறப்பட்டு சாவ கச்சேரி, கிளிநொச்சி, வவுனியா, அனுராதபுரம்,கல்கமுவ ஊடாக மகரகம வைத்தியசாலையைச் சென்றடைந்து அதே பாதை ஊடாக காலை 8.40மணிக்கு காலியைச் சென்றடையும்.
பின்னர் அதேநாள் பிற்பகல் 4.30மணிக்கு காலியில் இருந்து சேவையை ஆரம்பித்து காலை 6.40மணிக்கு யாழ் நகரை வந்தடையும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.