உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி மாத நிகழ்வுகளினை முன்னிட்டு வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பல்வேறு மக்கள் நலனோம்பு செயற்திட்டங்களின் வரிசையிலே கர்ப்பிணித்தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்வு கடந்த 21.12.2017 வியாழக்கிழமை நகராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பிரதேசத்தினுள் வசிக்கும் கர்ப்பிணித்தாய்மார்களின் உடற்திணிவுச் சுட்டிக்கமைவாக தெரிவுசெய்யப்பட்ட 16 தாய்மார்களுக்கு தலா ரூபா. 3,030.00 பெறுமதியான போசாக்குணவுப்பொதி வழங்கப்பட்டது. 2017ம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த செயற்பாட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து இதற்கான செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.