இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் - அருணாசலம் சிதம்பரநாதன்
பிரசுரிக்கபட்ட திகதி: 30/01/2021 (சனிக்கிழமை)
மரண அறிவித்தல்
அருணாசலம் சிதம்பரநாதன்
அன்னை மடியில் 23/03/1974 இறைவன் அடியில்17/01/2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை(Milton Keynes) வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் சிதம்பரநாதன் அவர்கள் ஞாயிறு(17/01/2021) லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரநாதன் அருணாசலம், திலகேஸ்வரி(நீயூசிலாந்து) தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
அனோஜ், அன்ஷிகா, வேடேஷ், ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜேந்திரன்(கஜன்), கவிதா, தெய்வேந்திரன்(நந்து), சைலஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகரன், பாலேந்திரராணி, சுரேஷ் - நிரோஷினி, சுபதீஷ் - தாரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, அஸ்வினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கரீஸ், தினேஸ், சிவானி,சனுஜன், யாஷ்ணவி, டீஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இறுதிக்கிரியை நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் வியாழக்கிழமை முற்பகல் 10:30 மணிமுதல் 12 மணிவரை நடைபெற்று பிற்பகல் 1 மணிக்கு Bierton மயானத்தில் தகனக் கிரியை நடைபெறும்.
கிரியை: தகனம்:
Thursday 04 February 2021 Thursday 04 February 2021
10:30am to 12pm 1pm to 2pm
7 Cordwainer Court Bierton Crematorium
Neath Hill Cane End Lane
Milton Keynes Bierton
MK14 6JW Aylesbury
HP22 5BH
குறிப்பு :
இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள Covid-19 சட்டங்கள் காரணமாக குடும்ப அங்கத்தவர்கள் மாத்திரம் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள், நண்பர்களுக்காக அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.