உலகின் மிகவும் வயதான கடற்பறவை மிட்வே அற்றல் (Midway Atoll) எனும் சன நடமாட்டம் அற்ற இடத்தில் கடந்த 19 ஆம் திகதி தென்பட்டுள்ளது அமெரிக்காவின் Federal wildlife அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Laysan Albatross இனத்தைச் சேர்ந்த இந்தப் பறவைக்கு Wisdom எனப் பெயரிடப்பட்டிருந்தது.
பறவைகள் தொடர்பான ஆராச்சிகளை மேற்கொண்ட ஒருவர் (Ornithologist), 1956 ஆம் ஆண்டு குறித்த இந்தப் பறவைக்கு ஒரு அடையாள சின்னத்தை போட்டிருந்தார். தற்போது இதன் வயது 64 என மதிக்கப்பட்டிருந்த போதும், இதன் வயது 64 ஆண்டை விட அதிகம் எனவும், இப்பறவை 36 ற்கு மேற்பட்ட குஞ்சுகளை பெற்றிருக்கும் என்றும் கருதப்படுகின்றது.
Midway Atoll என்னும் இடம் Honolulu ற்கு வட மேற்காக சுமார் 1,200 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளதுடன் இது Papahanaumokuakea Marine National Monument இனுடைய ஒரு பகுதியும் ஆகும்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.