உங்கள் வாக்குரிமையை இணையத்தில் சோதித்துப் பாருங்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 25/09/2014 (வியாழக்கிழமை)
உங்களது பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என உறுதி செய்து கொள்ளமுடியும் என என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை http://www.slelections.gov.lk/id/index.aspx என்னும் இலங்கை தேர்தல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதள முகவரியில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பார்வையிடலாம்.
சம்பந்தப்பட்டவர் தனது மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுப்பதன் மூலம் தனது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதாக என உறுதி செய்து கொள்ள முடியும்.
வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத நபர்கள் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப் படிவம் ஒன்றை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புவதன் மூலம் வாக்காளர் இடாப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு பிரதேச கிராம சேவகர் அலுவலகத்தில், பிரதேச செயலாளர் அலுவலகத்தில், உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
கீழே பரீட்சார்த்தமான மாதிரி ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.