இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (Vocational Training Authority, Srilanka) வட மாகாண காரியாலத்தின் தொழிற்பயிற்சி நிலையத்தினால் NVQ தையல் கற்கை நெறிகள் அண்மையில் வல்வை உட்பட்ட சில இடங்களில் நிறைவெய்தின. குறித்த கற்கை நெறிகளை நிறைவுசெய்த ஒரு தொகுதியினருகான வேலை வாய்ப்பு நீர்கொழும்பில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வழங்கப்படவுள்ளது.
ஏக காலத்தில் தையல் கற்கை நெறிகளில் இதுவரை பங்குகொள்ளாதவர்களுக்கும் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் 6 மாத காலத்துக்கு இலவச கற்கை நெறி வழங்கப்படவுள்ளது. இக் கற்கை நெறியில் ஈடுபடுபவர்களுக்கு மாதம் சுமார் 28,000/- சம்பளம், இலவச உணவு மற்றும் தங்குமிடத்துடன் வழங்கப்படவுள்ளது.
குறித்த ஆடைத் தொழிற்சாலை இலங்கை தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.
நாளை ஆரம்பமாகும் குறித்த இலவச கற்கை நெறி சம்பந்தமான மேலதிக விபரங்களைப் பேர் விரும்புவர்கள் கீழ் காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.