தொண்டைமனாற்றில் நிரந்தரமாக உதயமானார் நீச்சல்வீரர் நவரத்னசாமி
பிரசுரிக்கபட்ட திகதி: 25/03/2015 (புதன்கிழமை)
1954 இல் இதே தினத்தில் யாழ்பாணத்தின் வல்வெட்டித்துறை கரையிலிருந்து தமிழகத்தின் கோடியாக்கரை கரையை ஒரு வழி நீந்திக்கடந்து சாதனை படைத்த, தொண்டைமனாற்றை சேர்ந்த அமரர் திரு.முருக்குப்பிள்ளை நவரத்னசாமியின் உருவச்சிலை இன்று தொண்டைமனாற்றில் திறந்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை பிரதேசச்செயலர் திரு.இ.ஜெயசீலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிலையினை சுமார் 10 மணியளவில் திறந்துவைத்தார்.
விழாவில் நீச்சல்வீரர் நவரத்னசாமியின் புதல்வர்களில் ஒருவரான முன்னாள் வங்கி முகாமையாளர் திரு.ராமச்சந்திரன், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சிலை தொண்டைமனாற்று சந்தியையொட்டி, புதிய பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது. உறவினர்கள் , பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகளின் அரிய முயற்சியினால், சிலைக்கான அடிக்கல் கடந்த தைப்பூச தினத்தன்று இடப்படிருந்தது.
சிலையினை இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டம் வேளாங்கண்ணி இடத்தை சேர்ந்த திரு. கபடி விஜியன் மற்றும் இவரது குழுவினர் வடிவமைத்துள்ளனர்.
இன்றைய சிலை திறப்பு வைபவத்தை யாழ்பாணத்தின் தொலைக்காட்சி நிறுவனமான டான் டிவி நேரடி ஒளிபரப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனுடன் தொடர்புபட்ட எமது முன்னைய செய்திகள்
1.நீச்சல் வீரர் நவரத்தினசாமிக்கு தொண்டைமானாற்றில் சிலை அமைப்பதற்கு முயற்சி:
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.