அங்கங்களின் வளர்ச்சி சீரற்ற சிறுமிக்கு 3,82,000/- நிதி உதவி
பிரசுரிக்கபட்ட திகதி: 16/06/2018 (சனிக்கிழமை)
வல்வெட்டித்துறை மானாங்கானை பகுதியில் வசித்துவரும் வல்வை மகளிர் கல்லூரியில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் செல்வசேகரன் கௌசிகா என்னும் சிறுமிக்கு கொடையாளர்கள் சிலர் ரூபா 3,82,000/- நிதியுதவி அளித்துள்ளனர்.
முதுகெலும்பு வளைவு, ஒரு கை சோர்வு இயலாமை, முழங்கால் ஒன்றில் சில்லு இல்லாமை, நடக்க இயலாமை ஆகிய கூட்டு நோய்களுக்கு இவர் தற்போது யாழ்ப்பாணம் அரசினர் பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஆனாலும் மேலதிக சிகிசைக்கென 3 லட்சம் ரூபா தேவைப்பட்ட நிலையிலேயே மேற்குறித்த உதவியினை பின்வருவோர் வழங்கியுள்ளனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
குமுதினி (இலங்கை)
Posted Date: June 17, 2018 at 14:27
ஒரு கை நீட்டி உதவி செய்ய நல்ல உள்ளங்களை இரு கரம் கூப்பி வணங்கும் கடவுளாக.
RAJKUMAR PERIYATHAMBY (canada)
Posted Date: June 16, 2018 at 21:04
மிக சிறந்த செயல் உதவிய நல்ல மனம் கொண்டவர்களுக்கு நிறைந்த வாழ்த்துக்கள் ;
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.