கப்பலைத் தாக்கி அதிகாரி ஒருவரை கடத்திச் சென்றுள்ள கடற்கொள்ளையர்கள்
பிரசுரிக்கபட்ட திகதி: 06/07/2016 (புதன்கிழமை)
கினியாவின் கொனாக்றி நன்கூரப் பகுதியில் (Conakry Anchorage,Guinea) நங்கூரமிட்டிருந்த பாரந்தூக்கி கப்பல் ஒன்றில் (Heavy lift vessel) தானியங்கித் துப்பாக்கிகள் மற்றும் கத்திகள் சகிதம் ஏறிய 6 கடற்கொள்ளைக் காரர்கள், கப்பலின் ஒரு சிப்பந்தியைக் காயப்படுத்தி கப்பலின் 2 ஆம் நிலை அதிகாரியை (Second Officer) கடத்திச் சென்றுள்ளதாக மலேசியாவைத் தளமாகக் கொண்டு செயற்படும் கடற்கொள்ளைக் காரர்களுக்கு எதிரான நிறுவனமான International Maritime Bureau’s Piracy Reporting Centre (IMB PRC) அறிவித்துள்ளது
கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது கப்பல் மாலுமிகளை பயப்படுத்தும் நோக்கில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் மாலுமி ஒருவரைக் காயப்படுத்தி கப்பலின் மாலுமிகள் தங்கும் பகுதியிலும் (Accommodation) சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் இருந்து வெளியேற முன்னர், கடற் கொள்ளையர்கள், மாலுமிகளின் பணம் மற்றும் இதர பெறுமதிமிக்க பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.