வல்வெட்டித்துறை உட்பட பல இடங்களுக்கு நாளை காலை 08.30 முதல் மாலை 05.30 மணிவரை மின்தடைப்பட்டிருக்கும் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
மின் விநியோக மார்க்கங்களின் பராமரிப்பு திருத்த வேலைகளுக்காக குடாநாட்டின் சில இடங்களில் நாளை சனிக்கிழமை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபைகுட்பட்ட வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, கெருடாவில், சிதம்பராக்கல்லூரி, மயிலியதனை, உடுப்பிட்டி V.C, உடுப்பிட்டி வாசகசாலை சந்தி, இலந்தைக்காடு, நாச்சிமார் கோயிலடி, கொற்றாவத்தை, பொலிகண்டி ஜஸ் தொழிற்சாலை, ஆலடி, நெடியகாடு வெள்ளை ரோட், உடுப்பிட்டி சந்தி, உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சியம்மன் கோவிலடி, பாரதி சனசமூக நிலையடித்தடி, பழைய பொலீஸ் நிலையத்தடி, பொக்கனைச் சந்தி, அண்ணா சிலையடி, மண்டான் ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. (தினக்குரல்)
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.