நடைபெற்று வரும் வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா தற்பொழுது இடம்பெற்று வருகின்றது. இன்றைய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு மாபெரும் இந்திரவிழாவிற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றது.
ஊரணி தொடக்கம் ஊரிக்காடு வரையான மின் விளக்குகள், வாழை, மூங்கில், மின் அலங்காரங்கள், போட்டிக்கோக்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் பல்வேறு உருவங்களும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
இந்திரவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் இந்திர விழா இடம்பெறும் பிரதான பகுதியில் நெடியகாட்டில் 101 1/4 அடி உயரமுடைய ராட்சத புகைக்குண்டு உட்பட்ட ஏராளமான புகைக் குண்டுகளும் வானில் ஏவப்படவுள்ளன.
10 ற்கு மேற்பட்ட மேடைகளில் இசைக் கச்சேரிகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பொம்மல்லாட்டங்கள் போன்றன இடம்பெறவுள்ளன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.