யா /தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா 03.11.2018 நேற்று காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா தலைமையில் இடம்பெற்ற விழாவுக்கு முதன்மை விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திரு சந்திரலிங்கம் சுகிர்தன் அவர்களும், வீரகத்திப்பிள்ளையின் பேரன் இராஜசேகரம் தொண்டைமானாநாபன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் இணை பாடவிதான செயற்பாடுகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் நினைவுச்சின்னங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.