வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் 13 ஆம் திருவிழாவான சப்பறத் திருவிழா நேற்று இரவு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7 மணிக்கு ஆரம்பமாகியிருந்த வசந்த மண்டபப்பூசையைத் தொடர்ந்து மரபு வழியில் அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பறத்தில் அம்பாள் சுமார் 10 மணியளவில் வீதியுலா வந்தார்.
வீதி முழுவதும் பகதர்களால் நிரம்பி காணப்பட்டதுடன், ஏராளமான அடியார்கள் அங்கப் பிரதட்சணை மற்றும் அடிக்கழித்தலில் ஈடுபட்டிருந்தனர்.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.