வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரைக்கு வடமாகாண சபை உறுப்பினர் M.K சிவாஜிலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 300,000 ரூபா தருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்ற பட்டப் போட்டியின் போது சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திரு.சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த நிதிஉதவி போட்டி ஏற்பாட்டாளர்களான வல்வை விக்னேஸ்வர சனசமூக நிலையத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.