இலங்கையில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் 'Aris 13' எனப் பெயரிடப்பட்டுள்ள எண்ணை தாங்கி கப்பல் ஒன்று சோமாலியா கடற்கொள்ளையர்களால் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் பின்னர் நிகழும் முதலாவது கடத்தல் சம்பவம் இதுவாகும்.
கப்பலில் 8 மாலுமிகள் இருந்தனர் எனவும், கப்பல் கடத்தப் படுவதற்கு முன்னர் கப்பலில் இருந்து அபாய அறிவிப்பு சமிக்ஞை (Distress signal) வெளியிடப்பட்டதும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடத்தப்பட்ட கப்பலை கடற் கொள்ளையர்கள் அலுலா (Alula) எனும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர் என ருயிட்டேர்ஸ் (Reuters) செய்தி வெளியிட்டுள்ளது.
2 ஆம் இணைப்பு
இதேவேளை இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குறித்த கப்பல் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை என்றும், ஆனால் கப்பலில் உள்ள 8 மாலுமிகளும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளது.
இருதபோதிலும் கப்பல் ஜனவரி 27 ஆம் திகதி வரை இலங்கைக் கொடியின் கீழ் இருந்துள்ளது.
மேலும் கடத்ததாகக் கூறப்படும் மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் இதர தேவைகளை உறுதிப்படுத்த அரசாங்கம், கப்பல் நிறுவனம், இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தூதுவராலயங்களுடன் தொடர்பில் இருப்பதாக மேலும் தெரிவித்துள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.