வல்வெட்டி வேவில் வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி நூதன பஞ்சதள அதிசுந்தர இராஜகோபுர கும்பாபிஷேகம்
பிரசுரிக்கபட்ட திகதி: 12/01/2019 (சனிக்கிழமை)
வல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தானம் நூதன பஞ்சதள அதிசுந்தர இராஜகோபுர கும்பாபிஷேகம் 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை (ரேவதி) காலை 08.58 முதல் 10.08 வரை உள்ள சுப முகூர்த்த வேளையில் நடைபெறவுள்ளது.
★கர்மாரம்பம்- 06.02.2019 புதன்கிழமை காலை9.30 முதல் காலை 10.28 வரை சிறப்பு கிரியைகள்.
★எண்ணெய் காப்பு - 08.02.2019 வெள்ளிக்கிழமை காலை 07 மணி முதல் மாலை 07 மணி வரை பக்தர்கள் எண்ணெய் காப்பு சாத்துதல்.
★மஹாகும்பாபிஷேகம் - 10.02.2019 ஞாயிற்றுக்கிழமை (ரேவதி) காலை 08.58 முதல் 10.08 வரை காலை 08.58 மணிக்கு
■அதிசுந்தர பஞ்சதள இராஜகோபுர மஹாகும்பாபிஷேகம் தொடர்ந்து தூபி அபிஷேகம், காலை 10.08 மணிக்குள் விநாயக பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மஹாகும்பாபிஷேகம்.
இரவு 07 மணிக்கு வசந்த மண்டப பூஜை தொடர்ந்து விநாயக பெருமான் பூந்தண்டிகையில் வீதி உலா வருவார், திருவூஞ்சல்.
கும்பாபிஷேக பிரதமகுரு
விநாயக பூஜா துரந்தரர்
★சிவஸ்ரீ வேதாரணிய பாலச்சந்திரக்குருக்கள்
【வேவில் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், ஆதினகர்த்தாவும், வல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயண சுவாமி திருக்கோயில் பிரதமகுரு】
■இராஜ கோபுர கும்பாபிஷேக பிரதமகுரு
★சிவஸ்ரீ திருச்சிற்றம்பல விக்னேஸ்வரக்குருக்கள்
【வேவில் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், ஆதினகர்த்தாவும், ஆதி வைரவர் தேவஸ்தான பிரதமகுரு】
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.